சென்னை:கடந்த வருடம் கிண்டி மடுவாங்கறையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும், அதே இடத்தில் மேலும் ஒரு வட மாநிலத்தவர் சிக்கி இருக்கக்கூடும் என போலீசார் தேடி வந்த நிலையில், அவரது உடல் கண்டெடுக்க இயலாத காரணத்தினால் அப்போது அந்த பணியானது கைவிடப்பட்டது.
இந்நிலையில் நேற்று அதே பகுதியில் கட்டுமான பணிகளுக்காக பள்ளம் தோண்டியபோது மனித எலும்புக்கூடு கிடைத்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, கடந்த வருடம் நேர்ந்த விபத்தில் காணாமல் போன வட மாநிலத்தவரின் எலும்பு கூடா இது என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கைப்பற்றப்பட்ட எலும்புகளை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு ஆய்வுக்காக தடயவியல் போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
வாலிபர் மின்சாரம் தாக்கி படுகாயம் :சென்னை, திருவல்லிக்கேணி பிபி சாலை பகுதியில் வசிப்பவர் முனாப்(42). கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளது. மேலும், முனாப் மது பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவி பிரிந்து சென்ற நிலையில் இவர் மட்டும் தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் முனாப் மதுபோதையில் தனது வீட்டருகே உள்ள டிரான்ஸ்பார்மர் மீது ஏறிய போது மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். இதில் அவரது முதுகு, இடுப்பு, வலது கையில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் முனாப்பை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து ஐஸ் ஹவுஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாட்டிலால் மண்டை உடைப்பு : சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள டீ கடை அருகே இரண்டு நபர்கள் மது அருந்திவிட்டு அவ்வழியே சென்று கொண்டிருந்தவர்களிடம் தகராறு செய்துள்ளனர். இதைப்பார்த்த அவ்வழியே வந்த மற்றொரு நபர் இதனை தட்டிக்கேட்டுள்ளார்.