சென்னை: தமிழ்நாடு போக்குவரத்துக் கழக மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று சட்டப்பேரவையில் நடைபெற்றது. அப்போது வெளியிடப்பட்ட போக்குவரத்து கொள்கை விளக்கக் குறிப்பில், "போக்குவரத்து துறைக்கு சொந்தமான எட்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் மொத்தம் உள்ள 20 ஆயிரத்து 260 பேருந்துகள் மூலம் நாளொன்றுக்கு ஏறத்தாழ 1.76 கோடி மக்கள் பயணிக்கின்றனர்.
இந்நிலையில் வயது முதிர்ந்த பேருந்துகள் கழிவு செய்தல் தொடர்பான கொள்கை குறிப்பில், பேருந்தின் வயது, இயக்கப்பட்ட தூரம் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
அதில், விரைவுப் பேருந்துகள் 7 ஆண்டுகளின் முடிவில் அல்லது 12 லட்சம் கி.மீ., தூரம் ஓடி முடித்தால் இவற்றில் எது முந்தையதோ, அதைக் கணக்கில் கொண்டு அந்த பேருந்துகள் மாற்றப்படும். இதேபோல், மற்ற அனைத்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் 9 ஆண்டுகளின் முடிவில் அல்லது 12 லட்சம் கி.மீ., ஓடி முடித்தல் இவற்றில் எது முந்தையதோ அதனை கணக்கில் கொண்டு மாற்றப்பட வேண்டும்.