சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 (TNPSC Group-4) தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (தொகுதி- IV பணிகள்)-இல் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கொள்குறி வகை (OMR முறை) தேர்வு ஜூன் 9ஆம் தேதி முற்பகல் நடைபெற உள்ளது.
தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.