சென்னை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-4 பதவிகளில், கிராம நிர்வாக அலுவலர்(VAO), இளநிலை உதவியாளர் , தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், தனி உதவியாளர், கிளர்க் - 3, தனிச் செயலாளர் , இளநிலை நிர்வாகி, பால் பதிவாளர் , ஆய்வக உதவியாளர், பில் கலெக்டர் , தொழிற்சாலை மூத்த உதவியாளர் , வனப் பாதுகாவலர், இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியானது.
அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற எழுத்துத் தேர்வை 15 லட்சத்து 91 ஆயிரத்து 659 பேர் தேர்வெழுதி உள்ளனர். இந்த நிலையில் இந்த தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. 6,244 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்ற நிலையில், செப்டம்பர் மாதம் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டது.
இந்தநிலையில் மேலும் இந்தப் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை வைத்த நிலையில், அக்டோபர் 9 ஆம் தேதி கூடுதலாக 2,208 பணியிடங்களை சேர்த்து அறிவித்துள்ளது. ஆனாலும் மேலும் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது.
இதையும் படிங்க:டிஎன்பிஎஸ்சி 2025 ஆம் ஆண்டுக்கான உத்தேச தேர்வு அட்டவணை வெளியீடு!