சென்னை : தமிழக அரசு துறைகளில் குரூப் ஏ, குரூப் 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த செப் 14ம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் மொத்தம் 2,763 தேர்வு மையங்களில் 7,93,966 விண்ணப்பதாரர்கள் இத்தேர்வை எழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.
டிஎன்பிஎஸ்சி குரூப் II, IIA மற்றும் IV பாடத்திட்டம் மாற்றம் - லிங்க் இதோ! - TNPSC
குரூப் II, IIA மற்றும் IV பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
Published : Dec 13, 2024, 10:57 PM IST
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தர ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தேர்வர்களின் நலன் கருதியும் அரசுத் துறைகளின் தேவையைக் கருத்தில் கொண்டும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி // மற்றும் IIA பணிகள்)-க்கான முதல்நிலைத் தேர்வின் பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்திற்கான பாடத்திட்டமும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IV (தொகுதி IV பணிகள்)-க்கான தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்விற்கான பாடத்திட்டமும் மாற்றியமைக்கப்பட்டு https://tnpsc.gov.in/English/syllabus.htmlமற்றும் https://tnpsc.gov.in/tamil/syllabus.htmlஎன்ற தேர்வாணைய இணையதள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!