விழுப்புரம்:விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி வரை தினமும் இயக்கப்படும் பயணிகள் மின்சார ரயில் இன்று காலை வழக்கம் போல் 6 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. 8 பெட்டிகள் கொண்ட இந்த மின்சார ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்தை கடந்து இடதுபுறமாக புதுச்சேரி மார்க்க ரயில் பாதையில் திரும்பிய போது எதிர்பாராத விதமாக 6-வது ரயில் பெட்டியின் சக்கரம் ரயில் பாதையிலிருந்து திடீரென இறங்கி தடம் புரண்டது.
லோகோ பைலட் இதனை கவனித்து விரைவாக ரயிலை நிறுத்தியதால் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. மெதுவாக ரயில் சென்றதால் ரயில் பெட்டி தடம் இறங்கியதன் சப்தம் கேட்டதால் ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார். இதனால் 6-வது பெட்டி மற்றும் இடதுபுற சக்கரம் தடம் புரண்டு இறங்கியது.