கிளாம்பாக்கம்:செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக்கு பிறகு போக்குவரத்துத் துறை அமைச்சர் செய்தியாளர்ளிடம் பேசியதாவது; இந்த தீபாவளிக்கு 5 லட்சம் மக்கள் தென் மாவட்டங்களுக்கு சொந்த ஊர் செல்ல வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான சிறப்பு ஏற்பாடாக 4 ஆயிரத்து 210 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகிறது. பயணிகள் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் அண்ணா உயிரியல் பூங்கா, கரசங்கால் மற்றும் மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்குவதற்கான பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அங்கு போதுமான அத்தியாவசிய தேவைகளான குடிநீர் கழிப்பிடம் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:தவெக தொண்டர்கள் இருவர் பலி..! சென்னையில் இருந்து மாநாட்டிற்கு செல்லும் வழியில் நேர்ந்த சோகம்..!