தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரஃபா எல்லையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலைக் கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்! - Coimbatore Protest - COIMBATORE PROTEST

Coimbatore: கோவை உக்கடம் பகுதியில் இஸ்ரேலைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்
தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 7, 2024, 10:13 PM IST

கோயம்புத்தூர்: கோவை உக்கடம் பகுதியில் உள்ள ஒரு பேக்கரி அருகில் இஸ்ரேலைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் அன்சாரி தலைமையேற்று கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள் போரில் காயம் அடைந்தது போல் கை, கால், தலை பகுதிகளில் மாதிரி இரத்தக் கட்டு அணிந்து கோஷங்கள் எழுப்பினர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். குழந்தைகள் காயங்கள் ஏற்பட்டது போல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், அங்கு காவலர்கள் குழந்தைகள் இது போல் செய்யக் கூடாது எனக் கூறி அவர்களைக் கீழே இறக்கச் செய்தனர்.

பாலஸ்தீன தெற்கு எல்லையில் ரஃபா பகுதியில் பொதுமக்கள் கூடாரங்களில் இரவில் உறங்கிக் கொண்டிருக்கின்ற போது மக்கள் மீது குண்டுகளை வீசி குழந்தைகள் உள்பட 50க்கும் மேற்பட்டவர்களைக் கொன்று குவித்த இஸ்ரேலின் செயல்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.

ரஃபா எல்லையில் போர் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் (ICJ) அறிவித்த பிறகும் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து இனப்படுகொலையில் ஈடுபடும் இஸ்ரேலுடன் தூதரக உறவை இந்தியா உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது.

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பாலஸ்தீன நாட்டை இதுவரை 140 நாடுகள் தனி நாடாக அங்கீகரித்துள்ள வேளையில், பாலஸ்தீன மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீட்கப்படவும், தன்னாட்சி பெற்ற பாலஸ்தீனம் இயங்க அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க:நெல்லை ஜெயக்குமார் வழக்கு என்னாச்சு..? உடல் கிடந்த தோட்டத்தில் தீவிரமாகும் சோதனை! - Nellai Jayakumar Death Case

ABOUT THE AUTHOR

...view details