சென்னை:தமிழகத்தில்நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று (மார்ச்.31) அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அமைச்சருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் அமைச்சருக்கு இருதய பிரச்னை தொடர்பான சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன.