ராமநாதபுரம்:தமிழக கடலோரப் பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள், இலங்கை காங்கேசன் கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இரண்டு விசைப்படகுகளையும், அதிலிருந்த 23 மீனவர்களையும் கைது செய்தனர். மேலும், கைது செய்த மீனவர்களை விசாரணைக்காக காங்கேசன் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் செல்ல உள்ளனர்.
23 ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை: கவலையில் மீனவர்கள்.. - இலங்கை கடற்படை
Rameswaram Fishermen Arrested: எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி இரண்டு விசைப்படகுகளுடன் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கை கடற்படையால் 23 ராமேஸ்வர மீனவர்கள் கைது
Published : Feb 4, 2024, 9:22 AM IST
|Updated : Feb 6, 2024, 4:35 PM IST
இந்த நிலையில், தொடர்ச்சியாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருவதால், மீனவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. ஆகவே, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Last Updated : Feb 6, 2024, 4:35 PM IST