தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏப்.19 தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு - paid holiday on election day - PAID HOLIDAY ON ELECTION DAY

LS Polls holiday: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19 ஆம் தேதியன்று ஊதியத்துடன் கூடிய பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை உத்தரவு
ஏப்ரல் 19 ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 29, 2024, 1:23 PM IST

சென்னை: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுசேரியில், மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினமே தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நா.த.க என நான்கு முனை போட்டி திகழ்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி வாக்குப்பதிவு நாளான்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், “வாக்குப்பதிவு நாளன்று தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட அரசு மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் வணிகச் செயலாக்க அயலாக்கம் (BPO) நிறுவனங்களும் தங்களது பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புகார் அளிக்க மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகளை உருவாக்கி அதற்கான எண்களை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:பண்ணாரியம்மன் கோயிலில் பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் திருப்பூர் போலீஸ் விசாரணை - Flying Squad Seized Money

ABOUT THE AUTHOR

...view details