கோழிக்கோடு: தென்னிந்தியாவில் இருப்பதைப் போல, பல வட இந்திய மாநிலங்கள் தங்கள் அடையாளத்தையும் கலாச்சார பண்பையும் பாதுகாக்க தமக்கென ஒரு திரைப்படத் துறையைக் கொண்டிருக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது என தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கேரளமாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற மனோரமா நாளிதழ் குழுமத்தின் இலக்கியவிழாவில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், மாநிலங்கள் தங்களது சொந்த மொழிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்தி மொழி முன்னிலை பெறுவதுடன், மாநில மொழிகளை அழித்து விடும்.
இதன் காரணமாகவே இந்தி திணிக்கப்படுவதை திராவிடர் இயக்கம் எதிர்ப்புத் தெரிவித்தது. அதே நேரத்தில் இந்தி மொழியின் மீது எந்த விரோதமும் இல்லை. இலக்கியம், மொழி மற்றும் அரசியல் நெறிமுறைகளின் இணைப்பு ஒரு சக்திவாய்ந்த அடையாளத்தை உருவாக்குகிறது. அந்த அடையாளம்தான் தமிழ்நாட்டின் சமூக அரசியல் பரப்பில் ஆழமான வடிவத்தை கொண்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களும் மிகவும் வளர்ச்சியடைந்த மாநிலங்களாகும்.இரண்டு மாநிலங்களும் பாசிச மற்றும் வகுப்புவாத சக்திகளை வெற்றிகரமாக விலக்கி வைத்திருக்கின்றன.
எங்கள் தலைவர்கள் மக்களுடன் இணைவதற்கு இலக்கியத்தைப் பயன்படுத்தினார்கள். அண்ணாதுரை மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் உரைகள் இலக்கியக் குறிப்புகளை உட்புகுத்தியது மற்றும் திராவிட இயக்கத்தின் அரசியல் தத்துவத்தை வெகுஜனங்களுக்கு எளிதாகப் புரிய வைத்தது"என்று கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்