தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆஸ்திரேலிய ஓபன்: தமிழக வீரர் சாம்பியன்! இரட்டையர் பிரிவிலும் அசத்தல்! - விளையாட்டு வீரர் பிரித்வி சேகர்

ICF player Prithvi Sekhar: காது கேளாதோர் மற்றும் செவித்திறன் குன்றியோர் பங்கேற்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் தமிழக வீரர் பிரித்வி சேகர் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.

ஐசிஎப் விளையாட்டு வீரர் பிரித்வி சேகர்
ஐசிஎப் விளையாட்டு வீரர் பிரித்வி சேகர்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2024, 5:53 PM IST

சென்னை: காது கேளாதோர் மற்றும் செவித்திறன் குன்றியோர் பங்கேற்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளின் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டமும், இரட்டையர் பிரிவில் இரண்டாவது இடமும் பெற்று தமிழக வீரர் பிரித்வி சேகர் சாதனை புரிந்துள்ளார்.

டென்னிஸ் போட்டியில் கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் சிறப்பு வாய்ந்தவை. அதில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் கடந்த 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர்.

ஜனவரி 7ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென, தனித்தனியாக ஒற்றையர் பிரிவு, இரட்டையர் பிரிவு என்ற பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. 21 நாள்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டி நேற்றுடன் (ஜன. 28) நிறைவு பெற்றது. மேலும், இந்த போட்டியில் காது கேளாதோர் மற்றும் செவித்திறன் குன்றியோர் பங்கேற்கும் விதமாக டென்னிஸ் போட்டி நடைபெற்றது.

இதில், இந்தியாவின் முன்னனி வீரரான, சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎப்) பணிபுரியும் விளையாட்டு வீர் பிரித்வி சேகர் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் கோப்பை வென்றார். ஐசிஎப்பில், கணக்கியல் பிரிவில் கணக்காளராக பணியாற்றும் பிரித்வி சேகர், காது கேளாதோர் மற்றும் செவித்திறன் குன்றியோர் பங்கேற்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் சாம்பியன்ஷிப் பட்டமும், இரட்டையர் பிரிவில் இரண்டாவது இடமும் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

பிரித்வி சேகரின் சாதனைகளுக்காக, ஐசிஎப் பொது மேலாளர் பி.ஜி மால்யா பாராட்டு தெரிவித்து உள்ளார். இதற்கு முன்னரே பிரித்வி சேகர் பிரேசிலில் நடைபெற்ற காது கேளாதோர் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகளில் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், ஒற்றையர் பிரிவு மற்றும் ஆடவர் பெண்டிர் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் பெற்று உள்ளார். மேலும் உலக ரயில்வே சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய ரயில்வே அணியின் உறுப்பினராகவும் பங்கு பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் சாம்பியன்! 22 வயதில் பட்டம் வென்று அசத்தல்!

ABOUT THE AUTHOR

...view details