தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் மருத்துவமனைகளிலும் விரைவில் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி! - vaccination in private hospital

Free vaccination schemes: அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகள் இனி குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக செலுத்தி கொள்ளும் வகையில் புதிய திட்டம் விரைவில் தமிழக அரசு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 29, 2024, 9:07 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் பெண்கள் கர்ப்பம் அடைந்தது முதல் குழந்தை பிறந்த முதல் மாதத்தில் இருந்து செலுத்தப்படும் தடுப்பூசிகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ மருத்துவமனைகளில் இலவசமாக செலுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், தனியார் மருத்துவமனையில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான தவணை தடுப்பூசிகள் கூடுதல் விலை வைத்து தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், பிறந்த குழந்தைக்கு போடப்படும் முதல் தடுப்பூசி முதல் 18 வயது வரை மொத்தமாக 16 தவணை தடுப்பூசிகளை இனி குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக செலுத்தும் திட்டத்தை தமிழக அரசு விரைவில் தொடங்க உள்ளது.

இதன் மூலம் இனி குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் எந்தவிதமான கட்டணமும் இன்றி தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வாய்ப்பு உருவாகும். இதுகுறித்த அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும், விரைவில் இந்த திட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தொடங்கி வைக்க உள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:பீகார் இடஒதுக்கீடு ரத்து; உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க மறுப்பு! - Bihar quota bill

ABOUT THE AUTHOR

...view details