தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 14, 2024, 6:36 PM IST

ETV Bharat / state

தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் 5 பேருக்கு அறிவிப்பு! - TN Police Medals

TN Govt Special medals for Police: முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்பு பணிப் பதக்கங்கள் 15 பேருக்கும், தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் 5 பேருக்கும் தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின அணிவகுப்பு
சுதந்திர தின அணிவகுப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில், சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்த உள்ளார்.

இந்த நிலையில், 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்களை ஸ்டாலின் வழங்க உள்ளார். புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் 10 காவல் துறை அதிகாரிகள் 2024-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்பு பணிப் பதக்கங்கள் வழங்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள்,

  1. கி.புனிதா, காவல் ஆய்வாளர், சைபர் கிரைம் காவல் நிலையம், வேலூர் மாவட்டம்.
  2. து.வினோத்குமார், காவல் ஆய்வாளர், சைபர் கிரைம் பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, சென்னை.
  3. ச.செளமியா, காவல் துணை கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, கடலூர் மாவட்டம்.
  4. ஐ.சொர்ணவள்ளி, காவல்ஆய்வாளர், சைபர் கிரைம் காவல் நிலையம், திருப்பூர் மாநகரம்.
  5. நா.பார்வதி, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்.
  6. பெ.ராதா, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, திருப்பூர்.
  7. செ.புகழேந்தி கணேஷ், காவல் துணை கண்காணிப்பாளர், செங்கல்பட்டு உட்கோட்டம், செங்கல்பட்டு மாவட்டம்.
  8. இரா.தெய்வராணி, காவல் ஆய்வாளர், பெருந்துறை காவல் வட்டம், ஈரோடு மாவட்டம்.
  9. ஆ.அன்பரசி, காவல் ஆய்வாளர், பொன்னை காவல் நிலையம், வேலுார் மாவட்டம்.
  10. நா.சுரேஷ், துணை காவல் கண்காணிப்பாளர், ஊரக உட்கோட்டம், தூத்துக்குடி மாவட்டம்.

இதே போன்று பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2024-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

  1. அன்பு, காவல் துறை தலைவர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுதுறை, சென்னை.
  2. இ.கார்த்திக், காவல் கண்காணிப்பாளர்-I, தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை, சென்னை.
  3. சி.ர.பூபதிராஜன், துணைக் காவல் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு குற்றப்பபுலனாய்வுத் துறை, சேலம் சரகம்.
  4. க.சீனிவாசன், காவல் ஆய்வாளர் (தொ.நு.), காவல் தொலைத்தொடர்பு பிரிவு, சென்னை.
  5. பு.வ.முபைதுல்லாஹ், காவல் உதவி ஆய்வாளர், உள்வட்ட பாதுகாப்பு பிரிவு, அயல்பணி திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு, தலைமையகம், சென்னை.

மேலும், விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். இந்த விருதுகள் முதலமைச்சரால் மற்ற ஒரு விழாவில் வழங்கப்படும் எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த 23 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details