தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பரந்தூர் புதிய விமான நிலைய நில எடுப்புக்கான முதல் நிலை அறிவிப்பு வெளியானது! - பரந்தூர் விமான நிலையம் நில எடுப்பு

Parandur Airport: பரந்தூர் புதிய விமான நிலைய நில எடுப்புக்கான முதல் நிலை அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

பரந்தூர் புதிய விமான நிலைய நில எடுப்புக்கான முதல் நிலை அறிவிப்பு வெளியீடு
பரந்தூர் புதிய விமான நிலைய நில எடுப்புக்கான முதல் நிலை அறிவிப்பு வெளியீடு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 9:35 AM IST

காஞ்சிபுரம்: சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ளது. இதற்காக பரந்தூர் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்த அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள் முதல் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புதிய விமான நிலையத்திற்கான நிலங்களை கையகப்படுத்தும் அரசாணையை கடந்த வருடம் டிசம்பர் மாதம் அரசு வெளியிட்டது. இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் 32.04.05 சதுர மீட்டர் மற்றும் 2.77.76 சதுர மீட்டர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

நிலம் குறித்து பாத்தியதை உள்ளவர்கள், தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தனி மாவட்ட வருவாய் அலுவலர், புதிய பசுமைவெளி விமான நிலைய திட்டம், மண்டலம் 3, ஆர் ஆர் கார்டன், பரந்தூர் சாலை கற்பூரம் கம்பெனி அருகில், அங்காள பரமேஸ்வரி கோயில் பின்புறம், பொன்னேரிக்கரை, காஞ்சிபுரம் என்ற முகவரியில் எழுத்து மூலமாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனைகள் மீது வரும் ஏப்ரல் 4ஆம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:அயோத்திக்கும் காஞ்சிபுரத்திற்கும் இடையேயான உறவு..! காஞ்சி சங்கர மடம் கூறுவதென்ன?

ABOUT THE AUTHOR

...view details