தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாதவரத்தில் 'மாஸ்டர் பிளான்' போடும் தமிழக அரசு..தொழில்நுட்ப நகரம் அமைக்க டெண்டர் கோரியது! - TN govt tender for technology city - TN GOVT TENDER FOR TECHNOLOGY CITY

Technology City: சென்னை மாதவரத்தில் தொழில்நுட்ப நகரம் அமைப்பதற்கான மாஸ்டர் பிளான் தயாரிக்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 7, 2024, 4:35 PM IST

சென்னை: தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், உலகளாவிய திறன் மையங்கள், நிதி நுட்ப நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் ஆகிய துறைகளில் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதில், ஒரு பகுதியாக சென்னையில் ஒரு தகவல் தொழில்நுட்ப நகரத்தை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை புறநகரான மாதவரத்தில் இதற்காக 150 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. தொழில்நுட்ப நகரம் அமைப்பதற்காக மாஸ்டர் பிளான் தயாரிக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் டெண்டர் கோரி உள்ளது. இந்த நகரத்தில் அலுவலக வசதி, குடியிருப்பு வசதி, வணிக வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அருகில் அமைந்திருக்கும்.

குறிப்பாக பள்ளிகள், மருத்துவமனைகள், சுற்றுச்சூழல் பூங்கா, விளையாட்டு வளாகம், சாலை மற்றும் மெட்ரோ இணைப்பு, தடையில்லா மின்சாரம் மற்றும் தண்ணீர், குழாய் வழியாக சமையல் எரிவாயு வசதி உள்ளிட்ட வசதிகள் இந்த நகரத்தில் இருக்கும். அதேபோல் வணிக வசதிகளை பொறுத்தவரையில், வணிக வளாகம் சில்லறை விற்பனை கடைகள், உணவகங்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட வசதிகள் இருக்கும்.

மேலும், அதிநவீன வசதிகள் கொண்ட தரவு மையமும் இங்கு அமைய உள்ளது. இந்த மையத்தில் அதிநவீன கணினி வசதி, தரவுகளை சேமிக்கும் வசதி, பல்நிலை தரவு பாதுகாப்பு, பேரிடர் காலத்தில் தரவுகளை பாதுகாத்தல், அதிவேக இணைய வசதி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களை உள்ளடக்கி இருக்கும். மேலும், இந்த நகரத்தில் உலக தரத்திலான ஒரு மாநாட்டு மையமும் அமைக்கப்பட உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:சென்னை ஐஐடிக்கு ரூ.228 கோடி நன்கொடை வழங்கிய முன்னாள் மாணவர் கிருஷ்ணா சிவுகுலா! - IIT Alumnus Dr Krishna Chivukula

ABOUT THE AUTHOR

...view details