சென்னை:18வது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வருகின்ற ஏப்.26ஆம் தேதி 2ஆம் கட்டமாக 12 மாநிலங்களைச் சேர்ந்த 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் பணிபுரியும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலத் தொழிலாளர்கள் வாக்களிக்க ஏதுவாக, ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இராண்டம் கட்டமாக அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடக ஆகிய மாநிலங்களில் மக்களவைத் தேர்தலும், ஆந்திர மாநிலத்தில் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தலும் கீழ்க்காணும் நாட்களில் நடைபெறவுள்ளது. இதன்படி, ஏப்.26 கேரளா, கர்நாடகா ஏப்.26 முதற்கட்டம், மே 7 இரண்டாம் கட்டம், ஆந்திரவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.