தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுவிலக்கு திருத்த மசோதா நாளை தாக்கல்.. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு! - TN ASSEMBLY Session 2024 - TN ASSEMBLY SESSION 2024

TN CM MK Stalin: தமிழ்நாடு மதுவிலக்கு திருத்த மசோதா சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 28, 2024, 7:53 PM IST

சென்னை:போதைப்பொருள் விற்பனையை தடுத்து தண்டனையை கடுமையாக்கும் நோக்கில் மதுவிலக்கு திருத்தச் சட்டம் நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் காவல் மற்றும் தீயணைப்புத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய பாமக சட்டமன்ற கட்சித் தலைவர் ஜி.கே.மணி, "சந்து கடைகள் தமிழகத்தில் பல இடங்களில் இருந்து வருகிறது. காவல் துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் இல்லை” என குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் விற்பனை செய்வோரை கட்டுப்படுத்தும் நோக்கில் கடுமையான நடவடிக்கைக்கு வழிவகுக்கும் தமிழ்நாடு மதுவிலக்கு 1937 திருத்த மசோதா சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படும்" என்றார்.

இதையும் படிங்க:அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்! - TN ASSMEBLY Session 2024

ABOUT THE AUTHOR

...view details