காஞ்சிபுரம்:சிப்காட் நிறுவனத்தின் மூலமாக, வல்லம் வடகாலில், தொழிற்சாலை ஊழியர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் ஃபாக்ஸ்கான் நிறுவன தலைவர் யங் லியு கலந்து கொள்கிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் வடகாலில், தமிழக அரசின் சிப்காட் எனப்படும் தொழில் முன்னேற்ற நிறுவனத்துக்கு, 1,456 ஏக்கரில் தொழில் பூங்கா உள்ளது. இந்த தொழில் பூங்காவில் சிப்காட் நிறுவனத்தின் மூலமாக பல்வேறு தொழிற்சாலையின் ஊழியர்கள் தங்குவதற்கென விடுதிகள் 20 ஏக்கர் நிலப்பரப்பில் 700 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
சுமார் 18,720 நபர்கள் தங்கும் வகையில் 13 தொகுதிகளாக, 10 மாடிகள் கொண்டதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்த்தை இன்று மாலை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
சிறப்பம்சங்கள்:
- இந்த குடியிருப்பில் உள்ள ஒரு தொகுதியில் 240 அறைகள் உள்ளன.
- இதன்படி 13 தொகுதிகளில் மொத்தம் 3120 அறைகள் உள்ளன.
- டார்மெட்ரி முறையில் ஒவ்வொரு அறையிலும் ஆறு பேர் தங்கும் வகையில் படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.
- 18,720 தொழிலாளர்கள் இந்த குடியிருப்பில் தங்க முடியும்.
- ஒவ்வொரு தொகுதியின் முதல் தளத்தில் 4000 பேர் அமரும் வகையில் உணவு அருந்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளது.
- குடிநீர் வசதிக்காக ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
- பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மொத்தம் 1170 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் வளாகம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு சோலார் வாட்டர் ஹீட்டர் அமைக்கப்பட்டுள்ளது.
- அனைத்து அறைகளிலும் கொசு வலை வசதி செய்யப்பட்டுள்ளது.
- உள்ளரங்கம் மற்றும் வெளியரங்க விளையாட்டுகளுக்கான இடங்களும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது
- மழைநீர் சேகரிப்பு வசதி, கழிவு நீர் சுத்திகரிப்பு வசதி, திடக்கழிவு மேலாண்மை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வுக்கூட்டம்: அதிகாரிகளை கடிந்து கொண்ட உதயநிதி.. காரணம் என்ன? - Monsoon precautionary measures