சென்னை: முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். முன்னதாக அண்ணா சாலையில் 300-க்கும் மேற்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பதாகைகளை ஏந்தி அவரை வரவேற்றதால் சிறிது நேரம் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வம், ஏழை எளிய மக்களுக்கு தன்னை அர்ப்பணித்தவர் எம் ஜி ஆர். அதற்காக தான் அதிமுக என்ற மாபெரும் கட்சியை தொடங்கினர். அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணம் தான் எங்களுக்கு உள்ளது. எங்களின் கோரிக்கையாகவும் உள்ளது உண்மையான எதிர்க்கட்சி நாங்கள் தான் என்பதை தெளிவுபடுத்தி உள்ளோம்.
எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த ஓ.பன்னீர்செல்வம் (ETV Bharat Tamilnadu) தமிழ்நாடு அரசின் மெத்தனை போக்கை சுட்டிக் காட்டி மக்கள் மன்றத்திற்கு கொண்டு சென்று போராடி வருகிறோம். உலகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு கூட்டணி போல் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து செயல்படுகின்றன. முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவரை பார்த்து ஹலோ எப்படி இருக்கீங்க என்று கேட்கிறார். அதற்கு இவரும் சிரித்து நன்றாக இருக்கிறேன் என்று சொல்கிறார். உலகத்திலேயே பிரிந்த சக்திகள் இணைய கூடாது என்று சொல்பவர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான்.
என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.