திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சி நம்பியந்தல் கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி அருள்ஆனந்த். இவருக்கு சொந்தமான நிலத்தில் 2021 ஆம் ஆண்டு கரும்பு நடவு செய்தார். கரும்பை 2022 ஆம் ஆண்டு அறுவடை செய்ய வேண்டிய நிலையில் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பதிவு செய்து வைத்திருந்தார்.
அப்பொழுது அங்கு வந்து பார்த்த திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகள் கரும்பு நல்ல தரமாக உள்ளதால், இதை விதை பயிருக்கு பயன்படுத்தலாம் எனவே தற்போது அறுவடை செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.இதையடுத்து 2023 ஆம் ஆண்டு தொடர் மழையின் பொழுது அறுவடை செய்ய உத்தரவு கொடுத்துள்ளனர்.
அப்பொழுது பெய்த தொடர்மழையால் கரும்பு பயிரில் வெள்ளம் சூழ்ந்து அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பிறகு தற்போது வரை கரும்பை ஆலை நிர்வாகம் அறுவடை செய்யவில்லை. மாற்று ஏற்பாடாக அருகே உள்ள பண்ணரி சர்க்கரை ஆலை சார்பில் அறுவடை செய்யும் வகையில் டைவர்ஷன் உத்தரவு வழங்கியதாக கூறப்படுகிறது.