தமிழ்நாடு

tamil nadu

திருவள்ளூர் மக்களவைத் தேர்தல் 2024: தமிழகத்தில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் சசிகாந்த் செந்தில்! - LOK SABHA ELECTION RESULTS 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 4, 2024, 11:46 AM IST

Updated : Jun 4, 2024, 9:05 PM IST

Tiruvallur Lok Sabha Election Results 2024: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் அபார பெற்றி பெற்றார். மேலும் இந்த தேர்தலில் பிரதான கட்சிகள் பெற்ற வாக்குகள் குறித்து முழு விபரத்தை காணலாம்..

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள்
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் (GFX CREDIT - ETV Bharat TamilNadu)

திருவள்ளூர்:திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில்பாஜக வேட்பாளர் பொன் பால கணபதியை விட 5,68,352 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

வ.எண் வேட்பாளர்கள் கட்சிகள் பெற்ற வாக்குகள்
1 சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் 7,96,956
2 பொன் பால கணபதி பாஜக 2,24,801
3 நல்லதம்பி தேமுதிக 2,23,904
4 ஜெகதீஷ் சந்தர் நாம் தமிழர் கட்சி 1,20,838
  • திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 483153 வாக்குகளும், அதிமுக கூட்டணியிலுள்ள தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி 134731 வாக்குகளும், பாஜக சார்பாக பொன் பால கணபதி 139009 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் கட்சி ஜெகதீஷ் சந்தர் 70571 வாக்குகள் பெற்றுள்ளார். திருவள்ளூரில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியை விட 3,44,144 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். - 04.52 PM நிலவரம்.
  • திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 3,27,265 வாக்குகளும், அதிமுக கூட்டணியிலுள்ள தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி 96,958 வாக்குகளும், பாஜக சார்பாக பொன் பால கணபதி 93,371 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் கட்சி ஜெகதீஷ் சந்தர் 45,995 வாக்குகள் பெற்றுள்ளார். திருவள்ளூரில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியை விட 2,30,307 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். - 03.02 PM நிலவரம்.
  • திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் 8வது சுற்றில் திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 189429 வாக்குகளும், அதிமுக கூட்டணியிலுள்ள தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி 57633 வாக்குகளும், பாஜக சார்பாக பொன் பால கணபதி 53519 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் கட்சி ஜெகதீஷ் சந்தர் 24690 வாக்குகள் பெற்றுள்ளார். திருவள்ளூரில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியை விட 128796 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். - 01.04 PM நிலவரம்.
  • திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 142662 வாக்குகளும், அதிமுக கூட்டணியிலுள்ள தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி 44416 வாக்குகளும், பாஜக சார்பாக பொன் பால கணபதி 40672 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் கட்சி ஜெகதீஷ் சந்தர் 19021 வாக்குகள் பெற்றுள்ளார். திருவள்ளூரில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியை விட 98246 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். - 12.31 PM நிலவரம்.
  • திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 96,604 வாக்குகளும், அதிமுக கூட்டணியிலுள்ள தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி 32,656 வாக்குகளும், பாஜக சார்பாக பொன் பால கணபதி 28,852 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் கட்சி ஜெகதீஷ் சந்தர் 12,982 வாக்குகள் பெற்றுள்ளார். - 11.38 AM நிலவரம்.

தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக, அதிமுக போன்ற முக்கிய கட்சிகள் போட்டியிடாமல், அதன் கூட்டணிக் கட்சிகளை இங்கு களமிறக்கி உள்ளன. அதன்பேரில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில், அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ.வான கு.நல்லதம்பி, பா.ஜ.க சார்பில் பொன் வி.பாலகணபதி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீஷ் சந்தர், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் டி.தமிழ்மதி உள்பட 14 பேர் போட்டியில் உள்ளனர்.

2019ல் தேர்தல் களம் எப்படி?:2019 நாடாளுமன்ற தேர்தலில், திருவள்ளூர் தொகுதியில் மொத்தம் 13,89,914 வாக்குகள் பதிவாகின. இதில், திமுக கூட்டணியிலிருந்த காங்கிரஸ் கட்சி சார்பாகப் போட்டியிட்ட ஜெயக்குமார் 7,67,292 வாக்குகள் பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட வேணுகோபால் 4,10,337 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் லோகநாதன் 73,731 வாக்குகளும் பெற்றனர். காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார் 3,56,955 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தேர்தல் 2024: திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸின் கை ஓங்குமா? வெற்றி யார் பக்கம்? - THIRUVALLUR LOK SABHA ELECTION 2024

Last Updated : Jun 4, 2024, 9:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details