தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுபோதையில் நடுரோட்டில் காரை நிறுத்தி உறக்கம்.. திருமுல்லைவாயலில் குடிமகன்கள் அட்ராசிட்டி! - TRAFFIC POLICE ATTACKED

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் சாலையில் போதையில் இருந்த மூன்று இளைஞர்கள் நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு உறங்கிய நிலையில் காரை அகற்ற கோரிய போக்குவரத்து காவலரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

நடுரோட்டில் காருக்குள் உறங்கிய நபர்கள், போக்குவரத்து போலீஸ்
நடுரோட்டில் காருக்குள் உறங்கிய நபர்கள், போக்குவரத்து போலீஸ் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 17, 2024, 6:09 PM IST

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் ஆவடி போக்குவரத்து பிரிவில் காவலராக பணியாற்றி வருபவர் செல்லபாண்டி. இவர் இன்று (டிசம்பர்.17) காலை திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர் அருகே போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது, திடீரென போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து நெரிசலை காவலர் தடுக்கம் பொருட்டு அங்கிருந்து கூட்டம் இருந்த பகுதியை நோக்கி சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத மூன்று இளைஞர் நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு மது போதையில் தூங்கி கொண்டிருப்பதாக பொதுமக்கள் காவலரிடம் கூறியுள்ளனர்.

சம்பவ இடத்தில் இருந்த கிருஷ்ணன் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

இதையடுத்து காவலர் அந்த காரை தட்டி உள்ளே எட்டி பார்த்துள்ளார். அப்போது காருக்குள் இருந்த நபர்கள் காவலரை காருக்குள் இழுத்து அடிதடியில் ஈடுப்பட்டுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த போக்குவரத்து காவலரை அங்கிருந்த மக்கள் மீட்டுனர். இதன் பின்னர், கழுத்தில் காயம் அடைந்த காவலர் செல்லபாண்டியை சக காவலர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் அந்த காருக்குள் இருந்த மூன்று பேரில் ஒருவர் தப்பித்து ஓடிய நிலையில், இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சம்பவ இடத்தில் இருந்த கிருஷ்ணன் கூறுகையில், “ போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டதால் நடுரோட்டில் நின்றிருந்த காரை காவலர் அகற்ற சொல்லவதற்காக காருக்கு அருகே காவலர் சென்றார். அப்போது காரின் பின் பக்க சீட்டில் இளைஞர் ஒருவர் போதையில் மட்டை ஆகி இருந்தார். மேலும் ஓட்டுநர் சீட்டில் வெள்ளை சட்டை, கருப்பு ஃபண்ட் அணிந்து அவரும் போதையில் இருந்தனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என காரின் கதவை திறக்கும்படி காவலர் கூறினார்.

இதையும் படிங்க:மக்களை புற்றுநோய்க்கு இரையாக்கவா? கன்னியாகுமரி கனிம சுரங்கத்தை எதிர்க்கும் மீனவ சங்கம்! - உள்ளாட்சிகள் மறுசீரமைப்பு

அப்போது காரின் முன்பக்கத்தில் போதையில் அமர்ந்திருந்த நபர் (பசுபதி) போக்குவரத்து காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, காவலரின் சட்டையை பிடித்து காருக்குள் இழுத்து காவலர் மீது தாக்குதல் நடத்தி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவலர் செய்வதறியாது திகைத்து போனார்.

அப்போது அந்த நபருடன் நானும் சண்டை போட்டு காவலரை மீட்டேன். அப்போது முன்பக்க சீட்டில் இருந்த இளைஞர் தப்பி ஓடினார். பின்னர் ஓட்டுநரை (பசுபதி) காவலர்கள் காருடன் பிடித்து திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்” என்றார்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலுடன் பரபரப்பு ஏற்பட்டது. காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட போதை இளைஞரிடம் எங்கிருந்து எங்கு சென்றனர்? சொந்த வாகணமா அல்லது வாகனத்தை திருடிவிட்டு போகும் வழியில் போதையில் இங்கு நின்றிருந்தார்கள்? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details