தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நலிவடையும் பின்னலாடை தொழில்.. தனி வாரியம் அமைக்க திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் கோரிக்கை! - Tiruppur KNITWEAR Industry - TIRUPPUR KNITWEAR INDUSTRY

Separate Board for Knitwear: திருப்பூர் பின்னாலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறைக்கென தனி வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக அரசுக்கு திருப்பூர் பின்னாலாடை தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பின்னாலாடை தொழில் துறையினர்
பின்னாலாடை தொழில் துறையினர் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 28, 2024, 1:44 PM IST

திருப்பூர்: டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூரில் பின்னலாடை பிரதான தொழிலாக உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் நிட்டிங், டையிங், பேக்கிங், செக்கிங், எம்பிராய்டரிங் என பின்னலாடை துறையைச் சார்ந்த உப நிறுவனங்கள் என 20,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் தமிழகம் மட்டுமின்றி ஒடிசா, பீகார், அசாம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலம் என 10 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பின்னலாடை தொழில்துறையினர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

குறிப்பாக, திருப்பூரில் தயாரிக்கப்படும் ஆயத்த ஆடைகள் உள்நாட்டில் 30 ஆயிரம் கோடிக்கும், வெளிநாட்டில் 35 ஆயிரம் கோடிக்கும் என வருடத்திற்கு 65 ஆயிரம் கோடி வரை வர்த்தகம் நடைபெறுகிறது. பல லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் பின்னலாடை துறை, கடந்த சில வருடங்களாக பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருவதாகவும், குறிப்பாக பீக் ஹவர்ஸ் மின் கட்டண உயர்வு, ஏற்றுமதிக்கு வரி, கட்டிட வரி போன்ற பல்வேறு பிரச்சினைகளை திருப்பூர் தொழில்துறையினர் சந்தித்து வருகின்றனர்.

அதேபோன்று நூல் விலை, மூலப்பொருட்களின் விலை அவ்வப்போது மாறுதலும் என ஏகப்பட்ட பிரச்சினைகளைச் சந்தித்து வருவதாக திருப்பூர் தொழில் துறையினர் கூறுகின்றனர். இதன் விளைவு போட்டி நாடுகளான பங்களாதேஷ், வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளில் வரி இல்லாததால் திருப்பூரில் தயாரிக்கப்படும் ஆடைகளோடு குறைவாகவே உள்ளது என்று பல வெளிநாட்டைச் சேர்ந்த வர்த்தகர்கள் அங்கு செல்கின்றனர்.

மேலும் பீகார், குஜராத் போன்ற மாநிலங்களில் அம்மாநில அரசு பல்வேறு சலுகைகள் வழங்குவதால், பின்னலாடை துறை அங்கே ஊக்கவிக்கப்பட்டு வருகிறது. மேலும், திருப்பூர் தொழில் துறையினரின் பிரச்சினைகளை எடுத்துக்கூற பின்னலாடை துறைக்கு என்று தனி வாரியம் மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து அமைக்க வேண்டும் என்று பல வருடங்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பின்னலாடை வாரியம் அமைந்தால் மட்டுமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று திருப்பூர் தொழில் துறையினர் தெரிவித்தனர். திருப்பூர் தொழில்துறையினரின் கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்றி தொழிலை மீட்டு எடுக்குமா என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இது குறித்து திருப்பூர் உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கச் செயலாளர் செந்தில்வேல் ஈடிவி பாரத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, “பின்னலாடை வாரியம் அமைக்க பல வருடங்களாக கோரிக்கை விடுத்துள்ளோம்.

சிறு குறு தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த பின்னலாடை தொழில், தற்போது அழிந்து கொண்டே வருகிறது. பின்னலாடை வாரியம் அமைத்தால் மட்டுமே, பின்னலாடை துறை குறித்த பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். ஜவுளித்துறையோடு பின்னலாடை துறையையும் ஒன்றாக இணைத்ததால், பின்னலாடை துறையில் உள்ள சிக்கல்கள் வெளியே தெரிவதில்லை. நலிவடைந்து வரும் இந்த தொழிலைக் காப்பாற்ற அரசு நினைத்தால், பின்னலாடை வாரியம் ஒன்றை அமைக்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும், திருப்பூர் உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், “பின்னலாடை தொழில் 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி செய்யும் நகரமாக விளங்குகிறது. 2030-இல் ஒரு லட்சம் கோடி ரூபாய் என்பதை இலக்காக வைத்துக்கொண்டு இந்திய அளவில் 55 சதவீதம் பின்னலாடை ஏற்றுமதி நடைபெற்று வருகிறது. பின்னலாடை வாரியம் அமைக்க பல வருடங்களாக கோரிக்கை விடுத்துள்ளோம்.

சிறு, குறு பின்னலாடை ஏற்றுமதி சங்கத்தினர் சார்பில் தமிழக நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாடு பின்னலாடை ஏற்றுமதி அபிவிருத்தி வாரியம் (knitwear exports promotion board) அமைக்க கோரிக்கை விடுத்துள்ளோம். நிச்சயமாக தமிழக அரசு இதை செய்து கொடுக்கும் என்று நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க:பழைய ஓய்வூதியத் திட்டம்; தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் முதலமைச்சருக்கு கடிதம்! - Old Pension Scheme

ABOUT THE AUTHOR

...view details