தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக கூட்டத்தில் பிரியாணிக்காக நடந்த அடிதடி! - DMK members fight for biryani - DMK MEMBERS FIGHT FOR BIRYANI

DMK Members Fight For Biryani: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே திமுகவினர் நடத்திய பொதுக்குழு உறுப்பினர் கூட்டத்தில் பிரியாணிக்காக நடந்த அடிதடியால் உணவு அருந்தும் இடம் போர்க்களமானது.

பிரியாணிக்காக அடிதடியில் இறங்கிய திமுகவினர்
பிரியாணிக்காக அடிதடியில் இறங்கிய திமுகவினர் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2024, 5:21 PM IST

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையை அடுத்த தனியார் மஹாலில் திருப்பத்தூர் மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் முடிந்தபின் பொதுக்குழு உறுப்பினர் கூட்டத்தில் கலந்துகொண்ட திமுகவினருக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது. அப்போது திமுகவினர் சிலர் டேபிளில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டுள்ளனர். ஆனால் மற்ற சிலருக்கு டெபிள் இல்லாத காரணத்தால் தரையில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட முடிவு செய்து இலைகளை போட்டு சாப்பிடுவதற்காக தரையில் அமர்ந்துள்ளனர்.

இதையும் படிங்க:நான்கு நாட்களாக ஆற்றின் இடையே சிக்கித் தவிக்கும் நாய்.. ட்ரோன் மூலம் உணவளிக்கும் அரசு!

அப்போது தரையில் அமர்ந்த திமுகவினர் தங்களுக்கு பிரியாணி வழங்க கோரி சர்வரிடம் கேட்டுள்ளனர். ஆனால் சர்வராக இருந்த இளைஞர்கள் அவர்களை கவனிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் திடீரென சில இளைஞர்களை பிடித்து சாரமாரியாக தாக்கியுள்ளனர். இதன் காரணமாக, பிரியாணி பரிமாறப்பட்ட இடம் போர்க்களம் போல் காட்சி அளித்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் திமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி கட்சியினரை சமாதானம் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details