திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த டோல்கேட் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் சூர்யா (20). படித்து முடித்துவிட்டு சூர்யா வேலையில்லாமல் இருந்து வந்த நிலையில், இவருக்கு, சென்னையில் வெளி நாட்டிற்கு ஆட்களை அனுப்பி வைக்கும் பிரபல தனியார் நிறுவனத்தின், சப்ஏஜென்டாக பணிபுரியும் சத்தியமூர்த்தி என்பவர் அறிமுகமாகியுள்ளார். பின்னர், அவர் மூலம் வெளிநாட்டிற்குச் சென்று வேலை செய்யும் மோகத்தில் இருந்த சூர்யா, ரூ.1 லட்சம் கொடுத்து பிளம்பர் வேலைக்காக கடந்த 3ஆம் தேதி துபாய் சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து துபாய் சென்ற மூன்றே நாளில், அதாவது அக்டோபர் 6ஆம் தேதி சூர்யாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும், மேலும் அவர் சிகிச்சையில் உள்ளார் எனவும் உடன் பணிபுரியும் நபர்கள் சூர்யாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதனையறிந்த உறவினர்கள் கவலையில் இருந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆயிரம் கிலோ வெடிமருந்துடன் அசால்ட்டாக வந்த லாரி.. சீர்காழி அருகே பரபரப்பு!