தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் மாணவிகளை தவறாக வழிநடத்திய அரசுப் பள்ளி ஆசிரியை போக்சோவில் கைது! - நெல்லை அரசுப் பள்ளி

Tirunelveli Govt school teacher: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்றில் பணிபுரியும் ஆசிரியை, தலைமை ஆசிரியையுடன் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக பள்ளியில் பயிலும் மாணவிகளை வற்புறுத்தி, ஆபாசமாக பேச வைத்து சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பதிவிட்டதற்காக, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

POCSO
திருநெல்வேலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பெண் ஆசிரியை போக்சோவில் கைது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2024, 4:10 PM IST

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பணிபுரியும் தலைமை ஆசிரியை ஒருவர் பள்ளியில் வைத்து ஆட்டோ ஓட்டுநருடன் தகாத உறவில் ஈடுபட்டதாக, பள்ளியில் பயிலும் சிறுமிகள் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோ தொடர்பாக, போலீசார் விராணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், தலைமை ஆசிரியையுக்கும், அதே பள்ளியில் ஆசிரியையாக வேலைப் பார்க்கும் மங்கலம் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த முன்விரோதம் காரணமாக, தலைமை ஆசிரியைப் பழிவாங்கும் எண்ணத்தில், ஆசிரியை மங்கலம் தனது வகுப்பில் பயிலும் குழந்தைகளை அழைத்து தலைமையாசிரியை பள்ளியில் வைத்தே ஆண்களுடன் தகாத உறவில் ஈடுபட்டு வருவதாக பேசும்படி வற்புறுத்தி உள்ளார். இதற்காக அவர் குழந்தைகளுக்கு மூன்று மாதங்களாக பயிற்சி அளித்தது தெரியவந்தது.

ஆசிரியை சொல்வதைச் செய்ய வேண்டும் என்பதற்காக, சிறுமிகளும் ஆசிரியை மங்கலம் சொன்னதை அப்படியே செய்வதறியாது கூறி உள்ளனர். சிறுமிகள் பேசுவதை அருகில் இருந்தபடி, ஆசிரியை மங்கலம் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

பின்னர், தனது உறவினர் அனுராதா என்ற பெண்ணுடன் சேர்ந்து இருவரும் இணைந்து அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இது போலீசார் மேற்கொண்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பள்ளியில் பயிலும் சிறுமிகளைக் கட்டாயப்படுத்தி ஆபாசமாக பேச வைத்தற்காக, ஆசிரியை மங்கலத்தை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

அரசுப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை, தலைமை ஆசிரியையுடன் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, பள்ளியில் பயிலும் மாணவிகளை ஆபாசமாக பேச வைத்ததற்காக கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:திம்பம் வனப்பகுதி அருகே ஓடையில் ஜாலியாக உறங்கிய சிறுத்தை.. வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details