திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி வயது முதிர்வு காரணமாக மூட்டு வலி பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதை அறிந்த பக்தர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கோயில்களுடன் அதன் யானைகளும் பிணைக்க முடியாத பந்தத்தில் உள்ளன. அந்த வகையில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோயிலில் காந்திமதி என்ற யானை வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த யானை 1985ஆம் ஆண்டு நன்கொடையாளர்கள் மூலம் கோயிலுக்குக் கொண்டுவரப்பட்டது. காந்திமதி யானைக்கு 56 வயதாகும் நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக யானை காந்திமதி யானைக்கு மூட்டு வலி தொடர்பான பிரச்சினைக்குளுக்கு சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த ஒரு மாத காலமாக மூட்டு வலி அதிகமானதால் மருத்துவரின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறது.
இதனால், ஒரு மாத காலமாக யானை காந்திமதி இயலாமல் நின்றவாரே தூங்கி, அன்றாட பணிகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், நேற்று (ஜன.11) அதிகாலை யானை காந்திமதி படுத்து உறங்கியது. இதையடுத்து காலை அது மீண்டும் எழ முடியாமல் சிரமப்பட்டதால் உடனடியாக நெல்லை அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் வனத்துறை மருத்துவர்கள் கோயிலுக்கு வரவழைக்கப்பட்டனர்.