தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக கடிதம்!

Tirukkoyilur Assembly constituency: சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி சிறைத்தண்டனை பெற்ற நிலையில், அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 6:55 PM IST

Updated : Mar 5, 2024, 7:39 PM IST

சென்னை:சொத்துக் குவிப்பு வழக்கில் மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டதால், பொன்முடி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை அடுத்து, அவருடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியும் பறிபோனது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, பொன்முடி தரப்பிலிருந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையும் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த திருக்கோவிலூர் தொகுதி காலியாக உள்ளதாக, சட்டப்பேரவைச் செயலாளர் தரப்பில் இருந்து, தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, சில நாட்களுக்கு முன்பு திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்க வேண்டும் என அதிமுக தரப்பில் இருந்து மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க:திருக்கோவிலூர், விளவங்கோடு இடைத்தேர்தல் எப்போது? - சத்யபிரதா சாகு விளக்கம்!

Last Updated : Mar 5, 2024, 7:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details