தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூரில் கஞ்சா போதையில் குமாஸ்தாவை வழிமறித்து தாக்கிய 3 இளைஞர்கள் கைது! - Thiruvarur Clerk Attack Case - THIRUVARUR CLERK ATTACK CASE

Thiruvarur Clerk Attack Case: திருவாரூர் மாவட்டத்தில், கஞ்சா போதையில் குமாஸ்தாவை வழிமறித்து தாக்கியதோடு மட்டுமல்லாமல் செல்போன், பைக் உள்ளிட்டவற்றைப் பறித்துக் கொண்டு சென்ற மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

Thiruvarur Clerk Attack Case
Thiruvarur Clerk Attack Case

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 23, 2024, 8:50 PM IST

Updated : Apr 23, 2024, 8:59 PM IST

திருவாரூரில் கஞ்சா போதையில் குமாஸ்தாவை வழிமறித்து தாக்கிய 3 இளைஞர்கள் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், விஜயபுரம் அருகே பாரதி தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (42). இவர் குமாஸ்தாவாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று (ஏப்.22) மாலை விஜயபுரம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனம் மூலம் நேதாஜி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, நெய் விளக்கு தோப்பு என்கிற இடத்தில் சரவணனை வழிமறித்து, மூன்று இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, மூன்று இளைஞர்களில் ஒருவர், இருசக்கர வாகனத்தை பறித்துக்கொண்டு, பேபி டாக்கீஸ் சாலை வழியாக சென்றதாக கூறப்படுகிறது. மற்ற இருவரும் சரவணனை அருகில் இருந்த நகராட்சி கழிவறை கட்டடத்திற்குள் கொண்டு சென்று தாக்கி, செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சரவணன், இது குறித்து திருவாரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், திருவாரூர் நகரத்திற்குட்பட்ட அண்ணா காலனி பகுதியைச் சேர்ந்த ராகவன் (19), ரஞ்சித் குமார் (18), வினோத் (23) ஆகிய மூன்று நபர்கள் தான் சரவணனிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், மூவரும் கஞ்சா போதையில் குமஸ்தா சரவணனிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, போலீசார் இளைஞர்களிடம் இருந்து இருசக்கர வாகனத்தை மட்டும் பறிமுதல் செய்துள்ளனர். ஏற்கனவே, இந்த மூன்று பேர் மீது போதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

இதையும் படிங்க:முன்விரோதம் காரணமாக கொலை.. 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு! - Egmore Murder Judgement

Last Updated : Apr 23, 2024, 8:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details