திருநெல்வேலி:நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 45வது ஆட்சிப் பேரவை கூட்டம் (செனட்) பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் தலைமையில் இன்று (ஜூலை 5) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் செனட் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு துணைவேந்தர் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் பதிலளித்தனர்.
இந்த ஆட்சிப் பேரவை கூட்டத்தில் முக்கியமான மூன்று தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, தனியார் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தகுந்த ஊதியம், பணி பாதுகாப்பு தொடர்பான சட்டப் பாதுகாப்பு தமிழ்நாடு அரசு கேரளாவை போன்று நிறைவேற்ற வேண்டும்.
தமிழ்நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு எவ்விதமான நுழைவுத் தேர்வும் நடத்தக்கூடாது என்றும், புதிய தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்க தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தை நிறுத்தி வைத்து புதிய தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்க அனுமதி வழங்கக்கூடாது உள்ளிட்ட மூன்று முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.