தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் போக்சோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மற்றும் கஞ்சா விற்ற வழக்கில் கைதான 2 பேர் என மூன்று பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரின் அடிப்படையில், பள்ளி ஆசிரியர் மற்றும் கஞ்சா விற்பனை செய்த நபர்கள் உட்பட 3 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், மூவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுக்கா வகுரணி கிராமம் கணவாய்ப்பட்டி பகுதியைச் சேர்ந்த வைரதேவன் (60) என்பவரும், விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுக்கா அதிவீரன்பட்டி அருகே உள்ள சுக்கிரவார்ப்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் (45) என்பவரும் கஞ்சா வியாபாரிகள் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்களை கைது செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க:கடனை அடைக்க மூதாட்டியின் 4 சவரன் தாலியை பறித்துச் சென்ற இளைஞர் கைது!
மேலும், தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுக்கா பனையூர் மேலத் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் (37). இவர் ஒரத்தநாடு பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில், ஆசிரியர் முத்துக்குமரனை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
தற்போது, வைரத்தேவன், சிவக்குமார் மற்றும் ஆசிரியர் முத்துக்குமரன் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் எஸ்பி ஆஷிஷ் ராவத் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜத்திற்கு பரிந்துரை செய்தனர். அதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், பாப்பா நாடு போலீசார் வைரத்தேவன், சிவக்குமார், ஆசிரியர் முத்துக்குமரன் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்