தூத்துக்குடி:மூன்று சக்கர சைக்கிள் மூலம் தூத்துக்குடி மாவட்டம் கீழ சண்முகபுரம் கிராமத்திற்குச் சென்று இன்று (மே.26) காலை பழைய பேப்பர், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் அட்டைகளை சேகரித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட சாலை விபத்தில், மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், படுகாயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன்னர்.
ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சி மடம் பகுதியைச் சேர்ந்தவர் ரெங்கன் மகன் சிலம்பரசன் (35). இவர் மூன்று சக்கர சைக்கிளில், ஊர் ஊராகச் சென்று பழைய பேப்பர், அட்டை மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் ஆகியவற்றைச் சேகரித்து, அதனை தூத்துக்குடியில் உள்ள கடை ஒன்றில் விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் சிலம்பரசன், அவரது மனைவி தங்கம்மாள் (35) மட்டுமின்றி, தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி மாரியம்மாள் (60), முருகன் மகன் சதீஷ் (7) உள்ளிட்டோர் சிலம்பரசனுடைய மூன்று சக்கர சைக்கிளில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அமைந்துள்ள சூரங்குடியில் உள்ள கீழ சண்முகபுரம் கிராமத்தில் பழைய பேப்பர், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் அட்டைகளைச் சேகரித்துள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு, கிழக்கு கடற்கரை சாலையைக் கடந்துள்ளனர்.