திண்டுக்கல்:வத்தலகுண்டு அடுத்த அருணாசலம்புரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(35). வத்தலகுண்டு பகுதியில் மொபைல் கடை நடத்தி வரும் இவர், பாஜக இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். இவர் ஈரோட்டை சேர்ந்த சிவதர்ஷினி(29) என்பவரை, காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு மகள்கள் உள்ளனர்.
மணிகண்டன் வத்தலகுண்டு அடுத்த பட்டிவீரன்பட்டி அருகே உள்ள எம்.வாடிப்பட்டியில் சொந்தமாக வீடு கட்டி குடும்பத்துடன் குடியிருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2ஆம் தனது கடையில் பணிபுரியும் நபர் மூலம் தனது இரு குழந்தைகளையும் ஈரோட்டில் உள்ள சிவதர்ஷினியின் தாய் வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, குழந்தையை அனுப்பி வைத்தது குறித்து சிவதர்ஷினியின் உறவினர்கள் செல்போன் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், யாரும் பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், அவர்களின் வீடும் நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர்.
அப்போது, கணவன் மனைவி இருவரும் வீட்டில் தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பட்டிவீரன்பட்டி காவல் துறையினர், இருவரது உடலையும் கைப்பற்றி உடற்கூராய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.