தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் டேவிட் தலைமையிலான தனிப்படையினர் பேராவூரணி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நேற்று அதிகாலை பேராவூரணியில் இருந்து முடச்சிக்காடு பகுதியை நோக்கி சென்ற ஒரு லாரியை பேராவூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் தனிப்படையினர் வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர்.
330 கிலோ கஞ்சா
அப்போது அந்த லாரியில் ஒரு ரகசிய அறை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த அறையை திறந்து சோதனை செய்தபோது, அதில் 330 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது. அத்துடன், அந்த லாரியை பின்தொடர்ந்து சொகுசு காரில் வந்தவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்பி ஆஷிஷ் ராவத், ஒரத்தநாடு கூடுதல் எஸ்பி சஹனாஸ் இலியாஸ், பட்டுக்கோட்டை டிஎஸ்பி ரவிச்சந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் தென்காசி மாவட்டம் வீரகேரளம் புதூர் பகுதியை சேர்ந்த பெரமராஜ் (34) என்பதும், இந்த கஞ்சா கடத்தலுக்கு உறுதுணையாக இருந்த பேராவூரணி அருகே உள்ள காரங்குடா பகுதியை சேர்ந்த அண்ணாதுரை (44), கஞ்சாவை பதுக்கி வைக்க உதவியாக அம்மணிசத்திரம் பகுதியை சேர்ந்த முத்தையா (60) என்பதும் தெரிய வந்தது.
இதையும் படிங்க:மருத்துவரிடம் பிழைத்து வண்டலூர் பூங்காவில் இறந்த குரங்கு குட்டி... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை கேட்கும் கோர்ட்!