தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு அனைத்து பணியாளர் சிக்கன நாணய சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு அருகே புதுகுடியைச் சேர்ந்த ஸ்ரீதரன் (52) செயலாளராக பணிபுரிந்து வந்தார்.
இவர், அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில், இவருக்கு உதவியாக தற்காலிக பணியாளராக பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார். மேலும், இந்த வங்கியுடன் இ-சேவை மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த இ-சேவை மையத்தில் ஒரு பெண்ணும் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 13) மதியம் இ-சேவை மையத்தில் உள்ள பெண்ணும், ஸ்ரீதரனின் உதவியாளரும் மதிய உணவிற்காக வெளியில் சென்றுள்ளனர். அப்போது, ஸ்ரீதரன் மட்டும் தனியாக வங்கியில் இருந்துள்ளார். அந்த நேரத்தில், திடீரென பயங்கர சத்தத்துடன் கம்ப்யூட்டரில் உள்ள பேட்டரி வெடித்துள்ளது.