தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

6 டன் எடையுள்ள தேரை தூக்கிச் சென்ற பக்தர்கள்.. தஞ்சாவூரில் கோலாகலம்! - Thooku ther thiruvizha

Thooku ther Thiruvizha: பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் கிராமத்தில் சூரமாகாளியம்மன் கோயிலில் தூக்கு தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

Thooku ther thiruvizha photo
தூக்கு தேர் திருவிழாவில் பக்தர்கள் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 10, 2024, 1:13 PM IST

தூக்கு தேர் திருவிழா வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அடுத்த சூரப்பள்ளம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த சூரமாகாளியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டும் சித்திரைத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் மிக முக்கியமானது தூக்கு தேர் திருவிழா ஆகும்.

பொதுவாக, தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுப்பது வழக்கம். ஆனால், இந்தக் கோயில் தூக்கு தேர் திருவிழாவில் தேருக்கு சக்கரம் இல்லை. சுமார் 6 டன் எடையுள்ள தேரை இந்த கிராமத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் தங்களது தோள்களில் தூக்கிக் கொண்டு 2 கிலோ மீட்டர் தூரம் கோயிலைச் சுற்றி வந்தனர்.

இந்த கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சிங்கப்பூர், துபாய், லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் இந்த தூக்கு தேர் திருவிழாவிற்காகவே தங்களது சொந்த ஊரான சூரப்பள்ளம் கிராமத்திற்கு வந்து சிறப்பாக கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் நேற்று (மே 9) நடைபெற்ற தூக்கு தேர் திருவிழாவைப் பார்ப்பதற்கு பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சூரமாகாளியம்மனை வழிபட்டனர். தூக்கு தேருக்கு முன்னதாக தப்பாட்டம், மேளதாளங்கள் முழங்க, பிடாரியம்மன் சுவாமி முன்னே செல்ல, பின்பு தேரை பக்தர்கள் தோளில் சுமந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் கோயிலைச் சுற்றி வந்தனர்.

இதையும் படிங்க:“மாமா மேடைக்கு வாங்க..” பட்டுக்கோட்டை தலைமைக் காவலரின் நெகிழ்ச்சி செயல்! - Pattukottai Constable Viral Video

ABOUT THE AUTHOR

...view details