தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு - PUBLIC EXAM TIMETABLE RELEASED

2024-2025ஆம் கல்வி ஆண்டுக்கான 10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2024, 9:47 AM IST

கோயம்புத்தூர்: தமிழகத்தில் 2024-2025ஆம் கல்வி ஆண்டுக்கான 10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை கோவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். அதன்படி,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் 3ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 5ஆம் தேதியும் மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 28ஆம் தேதியும் பொதுத்தேர்வு தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு அட்டவணை:10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள், செய்முறை தேர்வு தேதிகள் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகள் என அனைத்தும் இன்று வெளியாகியுள்ள பொதுத்தேர்வு அட்டவணையில் இடம்பெற்றுள்ளது.

வ.எண் பொருள் 12ஆம் வகுப்பு 11ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு
1 பொதுத்தேர்வு தேதிகள் 03.03.2025 முதல் 25.03.2025 05.03.2025 முதல் 27.03.2025 28.03.2025 முதல் 15.04.2025
2 செய்முறை தேர்வு தேதிகள் 07.02.2025 முதல் 14.02.2025 15.02.2025 முதல் 21.02.2025 22.02.2025 முதல் 28.02.2025
3 தேர்வு முடிவுகள் 09.05.2025 19.05.2025 19.05.2025

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதி தேர்வு துவங்கி, 25ஆம் தேதி முடிவடைகிறது.

வ.எண் தேதி நாள் பாடம்
1 03.03.2025 திங்கட்கிழமை தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்
2 06.03.2025 வியாழக்கிழமை ஆங்கிலம்
3 11.03.2025 செவ்வாய்க்கிழமை

கணிதம், விலங்கியல், வணிகம், மைக்ரோ பயலாஜி,

ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை,

டெக்ஸ்டைல்ஸ் மற்றும் டிரஸ் டிசைனிங்,

உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல்,

நர்சிங் (பொது)

4 14.03.2025 வெள்ளிக்கிழமை

கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம்,

நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம்,

கணினி அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்,

பயோ கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ் தமிழ், ஹோம் சயின்ஸ்,

அரசியல் அறிவியல், புள்ளிவிவரங்கள்,

நர்சிங் (தொழில்முறை),

பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்

5 18.03.2025 செவ்வாய்க்கிழமை

உயிரியல், தாவரவியல், வரலாறு,

வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்,

பேசிக் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்,

பேசிக் சிவில் இன்ஜினியரிங்,

பேசிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்,

பேசிக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்,

டெக்ஸ்டைல் ​​டெக்னாலஜி,

அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்

6 21.03.2025 வெள்ளிக்கிழமை வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
7 25.03.2025 செவ்வாய்க்கிழமை இயற்பியல், பொருளாதாரம், வேலை வாய்ப்பு திறன்கள்

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் தேதி தேர்வு துவங்கி, 27ஆம் தேதி முடிவடைகிறது.

வ.எண் தேதி நாள் பாடம்
1 05.03.2025 புதன்கிழமை தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்
2 10.03.2025 திங்கட்கிழமை ஆங்கிலம்
3 13.03.2025 வியாழக்கிழமை

கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம்,

நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம்,

கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள்,

உயிர், வேதியியல், அட்வான்ஸ் தமிழ்,

ஹோம் சயின்ஸ், அரசியல் அறிவியல்,

புள்ளிவிவரங்கள், நர்சிங் (தொழில்முறை),

பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்

4 17.03.2025 திங்கட்கிழமை

உயிரியல், தாவரவியல், வரலாறு,

வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்,

பேசிக் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்,

பேசிக் சிவில் இன்ஜினியரிங்,

பேசிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்,

பேசிக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்,

டெக்ஸ்டைல் ​​டெக்னாலஜி,

அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்

5 20.03.2025 வியாழக்கிழமை இயற்பியல், பொருளாதாரம், வேலை வாய்ப்பு திறன்கள்
6 24.03.2025 திங்கட்கிழமை

கணிதம், விலங்கியல், வணிகம், மைக்ரோ பயலாஜி,

ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை,

டெக்ஸ்டைல்ஸ் மற்றும் டிரஸ் டிசைனிங்,

உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல்,

நர்சிங் (பொது)

7 27.03.2025 வியாழக்கிழமை வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் தேதி தேர்வு துவங்கி, ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி முடிவடைகிறது.

வ.எண் தேதி நாள் பாடம்
1 28.03.2025 வெள்ளிக்கிழமை தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்
2 02.04.2025 புதன்கிழமை ஆங்கிலம்
3 04.04.2025 வெள்ளிக்கிழமை விருப்ப மொழி
4 07.04.2025 திங்கட்கிழமை கணிதம்
5 11.04.2025 வெள்ளிக்கிழமை அறிவியல்
6 15.04.2025 செவ்வாய்க்கிழமை சமூக அறிவியல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details