தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நண்பர்களுடன் சூப் சாப்பிட சென்ற நபர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்.. திருவாரூர் அருகே நிகழ்ந்த சோகம்! - THIRUVARUR MAN HEART ATTACK - THIRUVARUR MAN HEART ATTACK

THIRUVARUR MAN HEART ATTACK: திருவாரூர் அருகே நண்பர்களுடன் சூப் சாப்பிடச் சென்ற நபர், செல்லும் வழியிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலாளியின் உறவினர்கள்
தொழிலாளியின் உறவினர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2024, 10:24 AM IST

திருவாரூர்:திருவாரூர் மாவட்டம் முகந்தனூர் பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரது மகன் சரவணன் (49). இவர் பாப்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் தங்கி பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் பணியை முடிந்து கொண்டு திரும்பிய சரவணன், தனது நண்பர்களுடன் தொழிற்சாலை அருகில் உள்ள சூப் கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது செல்லும் வழியிலேயே சரவணனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சாலையிலேயே மயங்கி விழுந்து உள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சரவணன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உயிரிழந்தவரின் சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நண்பர்களுடன் சூப் சாப்பிட வந்த நபர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மயிலாடுதுறையில் பட்டாசு குடோனில் வெடி விபத்து; பலி எண்ணிக்கை இரண்டாக உயர்வு!

ABOUT THE AUTHOR

...view details