தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலை மகாதீபம்: திருப்பத்தூரிலிருந்து 220 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! - THIRUVANNAMALAI DEEPAM 2024

திருவண்ணாமலை மகாதீபத்தை முன்னிட்டு திருப்பத்தூரிலிருந்து திருவண்ணாமலைக்கு 220 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என போக்குவரத்து கழக அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

திருப்பத்தூர் பேருந்து நிலையம்
திருப்பத்தூர் பேருந்து நிலையம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2024, 2:54 PM IST

திருப்பத்தூர்: திருவண்ணாமலை மகாதீபத்தை முன்னிட்டு, விழுப்புரம் கோட்டம் மற்றும் சேலம் கோட்டம் சார்பில் திருப்பத்தூர் பணிமனையில் இருந்து திருவண்ணாமலைக்கு மொத்தம் 220 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து கழக அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், அவை இன்று காலை 7 மணி முதல் நாளை மாலை 7 வரை மட்டும் செயல்படும் எனவும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 4-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

தீபத் திருவிழாவின் 10ஆம் நாளான இன்று (டிசம்பர் 13) வெள்ளிக்கிழமை, மாலை மகா தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று பரணி தீபம் ஏற்றப்பட்டுள்ளது.

220 சிறப்பு பேருந்துகள் இயக்கம்:

இந்நிலையில், திருவண்ணாமலை கார்த்திகை மாத மகா தீப திருவிழாவை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்டத்தில் பக்தர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம் சார்பில், திருப்பத்தூர் பணிமனையில் இருந்து திருவண்ணாமலைக்கு 140 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதையும் படிங்க:திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் முழு விவரம்!

மேலும், ஆம்பூர் பணிமனையில் இருந்து 40 பேருந்துகள் மற்றும் சேலம் கோட்டம் சார்பில், திருப்பத்தூர் பணிமனையில் இருந்து 40 பேருந்துகள் என மொத்தம் 220 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, இன்று காலை 7 மணி முதல் நாளை மாலை 7 வரை பேருந்துகள் இயக்கப்படுகிறது என போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை:

அகல் விளக்கு (ETV Bharat Tamil Nadu)

ஏரியில் நீர் நிரம்பியதால் வண்டல் களிமன் எடுக்க சிரமமாக உள்ளது எனவும், மண் விலை உயர்வால் மண்பாண்ட பொருட்கள் மற்றும் அகல் விளக்கு ஆகியவை, கடந்த வருடத்தோடு இந்த வருடம் விற்பனை குறைந்துள்ளது எனவும் மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பூ விளைச்சல் குறைவு:

பூக்கள் (ETV Bharat Tamil Nadu)

தொடர் மழை காரணமாக பூ விளைச்சல் சற்று குறைந்துள்ளது. அதனால், பூ விலை கிடுகிடுன்னு உயர்ந்துள்ளது கூறப்படுகிறது. அந்த வகைஅயில், மல்லிகை பூ ரூ.1000, முல்லைப் பூ ரூ.1000 மற்றும் சம்பங்கி மற்றும் ரோஸ் உள்ளிட்ட பூ வகைகள் சற்று விலை உயர்ந்து காணப்படுகிறது. விலையின் காரணமாக பொதுமக்கள் பூக்களை வாங்கமுன் வரவில்லை என்று பூக்கடை தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details