தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சமூக நீதிப் பார்வையோடு விஜய் அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கிறார் - திருமாவளவன் மகிழ்ச்சி! - tvk vijay - TVK VIJAY

தவெக தலைவர் விஜய் சமூக நீதிப் பார்வையோடு அரசியல் களத்தில் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சி அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விஜய் குறித்து திருமாவளவன் பேச்சு
விஜய் குறித்து திருமாவளவன் பேச்சு (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2024, 1:04 PM IST

Updated : Sep 18, 2024, 1:15 PM IST

சென்னை: இரட்டைமலை சீனிவாசனின் நினைவு நாளை ஒட்டி, சென்னை ஓட்டேரி இடுகாட்டில் உள்ள அவரது நினைவிடத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் எம்பி மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ''விஜய் பெரியார் திடலில் மரியாதை செலுத்தியதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியுற்றேன். அதைப் பாராட்டி சமூக ஊடக பக்கங்களிலும் பதிவு செய்து இருக்கிறேன். சமூக நீதிப் பார்வையோடு விஜய் அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கிறார் என்பது மகிழ்ச்சி அளிப்பதுடன், மிகுந்த நம்பிக்கையையும் அளிக்கிறது. பெரியார் அரசியல் என்பது திமுக, அதிமுக என்ற இரு கட்சிகளுக்கு மட்டுமல்ல, சமூக நீதி நம்பிக்கை வைத்துள்ள அனைவருக்குமானது, சமத்துவத்தை நாடும் அனைவருக்குமானது.

அந்த புரிதல் விஜய்க்கு இருப்பதைக் கண்டு உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன். அதை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன். பெரியார் என்று சொல்வது பாஜகவிற்கு பிடிக்காது, ஆளுநர் ரவி சட்டமன்றத்தில் பெரியார் என்ற சொல்லையே உச்சரிக்க மாட்டேன் என்று வெளியேறியவர், அந்த அளவிற்கு பாஜகவினருக்கு பெரியார் மீது ஒரு வெறுப்பு உள்ளது.

இதையும் படிங்க:"இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் நிலைக்கு வந்துள்ளோம்" - அமைச்சர் துரைமுருகன்!

பாஜக எதிர்பார்த்தது நடக்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்கள் உள்ளன. இப்போது தேர்தல் கணக்கு கூட்டணி கணக்கு என்று கூப்பாடு போட்டார்கள், கூச்சல் எழுப்பினார்கள், எப்படியாவது கூட்டணியில் விரிசல் அடைந்து பிளவு ஏற்படாதா என்று எதிர்பார்த்து ஏமாந்து போனார்கள்.

விசிகவும், திமுகவும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறது. முரண்பாடான அரசியல் தான், ஆனால் இணைந்து பயணிப்போம் என்கிற முடிவில் கொள்கை தளத்தில் இருவரும் இணையாக இருக்கிறோம் என்று உணர்த்துகிறது.

திமுகவும், விடுதலை சிறுத்தைகளும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறது. விசிக தேசிய அளவிலான மதுவிலக்கு கொள்கை வேண்டும் என்று சொல்கிறோம். திமுகவிற்கும் அதில் உடன்பாடு உள்ளது. அன்றே அண்ணா அந்த கருத்தை வலியுறுத்தி இருக்கிறார் என திருமாவளவன் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Sep 18, 2024, 1:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details