வேலூர்:விஐடி போபால் வளாகம் சார்பில், வேலுார், திருவண்ணாமலை, திருப்பத்துார், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு பாராட்டும் விழா, விஐடி வேலுார் வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
விழாவின்போது, விஐடி வேந்தர் கோ.விசுவநாதனின் பிறந்தநாள் விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், குழு உறுப்பினர் ரமணி சங்கர், உதவி துணைத்தலைவர் காதம்பரி விசுவநாதன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் என்று ஏராளமானோர் திரண்டு வேந்தருக்கு பிறந்தாள் நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.