தேனி:தேனி - மதுரை சாலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் பங்களா மேட்டில் இருந்து 1.26 கிலோமீட்டர் தூரத்திற்கு 92 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த மேம்பாலப் பணி ஓராண்டுக்குள் முடிக்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இதனால் தேனி - மதுரை சாலை கடந்த 2 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருந்து வருகிறது.
தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களும், அரசு மருத்துவமனைக்குச் செல்லும் ஆம்புலன்ஸ்களும் இந்த பிரதான சாலையின் வழியாகவே சென்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் ஆகியோர் மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்தனர்.