தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறு.. 5 வயது சிறுவனை கல்லால் அடித்துக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை! - 5 year old boy murder case

திருமணத்தை மீறிய உறவிற்கு தடையாக இருந்ததாகக் கூறி 5 வயது சிறுவனை கல்லால் அடித்துக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நபர்
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நபர் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2024, 1:45 PM IST

தேனி: கடந்த 2019ஆம் ஆண்டு, தேனி மாவட்டம் கோம்பை காவல் நிலையம் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் ஐந்து வயது சிறுவன் பலத்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடப்பதாக காவல்துறையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில், சிறுவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த கோம்பை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், காவல்துறை விசாரணையில், இறந்த சிறுவன் கீதா மற்றும் முருகன் என்ற தம்பதிக்கு பிறந்த சிறுவன் என தெரிய வந்தது. இதனை அடுத்து, காவல்துறையினர் சிறுவனின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டதில், கீதா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 5 வயது மகன் ஹரிஸ் உடன் தனியாக வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.

மேலும், அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும், கீதாவிற்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்ட நிலையில், கீதாவின் வீட்டிற்கு கார்த்திக் செல்லும்போதெல்லாம் சிறுவன் ஹரிஷ் இடையூறாக இருந்ததாகக் கூறி, கார்த்திக் சிறுவனை ரங்கநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று, செங்கல்லைக் கொண்டு சிறுவனின் தலையில் அடித்து கொடூரமாக கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:தேனி கல்லூரி மாணவி பாலியல் தொல்லை புகாருக்கு காவல்துறை மறுப்பு.. என்ன நடந்தது?

இதனை அடுத்து, கோம்பை காவல்துறையினர் 5 வயது சிறுவனைக் கொலை செய்த கார்த்திக் என்ற இளைஞரைக் கைது செய்து, அவர் மீது கொலை வழக்கையும் பதிவு செய்து விசாரணை அறிக்கையை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள கூடுதல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், சாட்சியங்கள் மற்றும் தடயங்களின் அடிப்படையில் கார்த்திக் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து கூடுதல் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கோபிநாத் தீர்ப்பு வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, கார்த்திக் மதுரை மத்திய சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details