தேனி:தேனியில் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி பாலியல் உறவில் ஈடுபட்டவருக்கு IPC 366 பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும், போக்சோ சட்டத்தில் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தேனி மாவட்டம் தேனி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் தனது 15 வயது மகளை காணவில்லை என கடந்த 2019ஆம் ஆண்டு அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வந்தனர்.
இதில் தேனியை அடுத்த வீரபாண்டி கிழக்கு தெருவைச் சேர்ந்த அஜித் (வயது 21) அச்சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி பாலியல் உறவு கொண்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார், அஜித் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.