தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்பூர் பெண்ணின் மர்ம மரணம்... அனாதையான பெண் குழந்தைகள்.. கணவன் கைது..!

ஆம்பூர் அருகே இரண்டு பெண் குழந்தைகளின் தாய் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைதான கணவன், சுதாவின் உறவினர்கள்
கைதான கணவன், சுதாவின் உறவினர்கள் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மிட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு சுதா என்பவருடன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், சுதா மற்றும் அவரது கணவரிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

மேலும், சுதாவிற்கு இரண்டும் பெண் குழந்தையாக பிறந்ததால், அவரது மாமியார் ருக்குமணி சுதாவிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். இந்த சூழலில், கடந்த ஞாயிற்றுகிழமை (16.11.2024) சுதா வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டதாக சுதாவின் கணவர் கண்ணன், குடியாத்தம் மீனூர் பகுதியில் உள்ள சுதாவின் உறவினருக்கு தகவல் அளித்துள்ளார்.

அதனை தொடர்ந்து வன்னியநாதபுரத்திற்கு வந்த சுதாவின் உறவினர்கள், குடும்ப தகராறு காரணமாக சுதாவை அவரது கணவர், மற்றும் மாமியர் அடித்துக் கொலை செய்துவிட்டதாகவும், அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடுவதாகவும் கூறி சுதாவின் உறவினர்கள், அவரது சடலத்தை எடுக்கவிடாமல், போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதையும் படிங்க:ஓசூர் வழக்கறிஞரை வெட்டிய சம்பவத்தில் பகீர் திருப்பம்... ஆனந்தின் மனைவியும் கைது..!

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உமராபாத் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டனர்.

அதனை தொடர்ந்து மாமியார் ருக்குமணியை விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்துச்சென்ற போது, சுதாவின் உறவினர்கள் ருக்குமணியை சரமாரியாக தாக்கினர். உடனடியாக ருக்குமணியை மீட்ட போலீசார் ஆட்டோ மூலம் அவரை அழைத்துச் சென்றனர்.

அதனை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆனதல் சுதா இறப்பு குறித்து வாணியம்பாடி வருவாய் கோட்டாச்சியர் அஜிதா பேகம் விசாரணை மேற்கொண்டதில், சுதாவின் உடலில் அதிக காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டதாக, உமராபாத் காவல்துறையினருக்கு விசாரணை மற்றும் மருத்துவ அறிக்கையை சமர்பித்துள்ளார்.

அதனை தொடர்ந்து சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சுதாவின் கணவர் கண்ணனை கைது செய்து அவரை ஆம்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இது கொலையா? தற்கொலையா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details