தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு எதிரான வழக்கை தொடர்ந்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவு! - LOTTERY MARTIN CASE

லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிரான முறைகேடு வழக்கை தொடர்ந்து விசாரணை செய்ய அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras High Court
சென்னை உயர்நீதிமன்றம் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2024, 1:51 PM IST

சென்னை: கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை நங்கநல்லூரை சேர்ந்த் நாகராஜன் என்பவரது இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, 7 கோடியே 20 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், லாட்டரி அதிபர் மார்டின் உள்ளிட்டோருடன் இணைந்து கேரளா மற்றும் மஹாராஷ்டிராவில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த தொகை என நாகராஜன் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து, நாகராஜன், லாட்டரி அதிபர் மார்டின், மார்டின் மனைவி லீமா ரோஸ் உள்ளிட்ட நான்கு பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த் வழக்கை அடிப்படையாக வைத்து சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று கூறி வழக்கை முடித்து வைக்கக்கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், லாட்டரி அதிபர் மார்டின் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது. இதனை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதையும் படிங்க:தண்டையார்பேட்டையில் 1,700 ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் அகற்ற நீதிமன்றம் உத்தரவு!

இந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல் சுந்தரேசன், "இந்த விவகாரத்தில் மோசடி நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இருந்த நிலையிலும், காவல்துறை அறிக்கையை ஏற்று நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது தவறு" என வாதிட்டார்.

மத்திய குற்றப்பிரிவு சார்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் அறிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதனை எதிர்த்து மனுத்தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை" என வாதிட்டார்.

அதேபோல, மார்டின் உள்ளிட்டோர் சார்பிலும் அமலாக்கத்துறை மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வாதங்களை ஏற்க மறுத்து, மார்ட்டின் உள்ளிட்டோர் மீதான வழக்கை முடித்து வைத்த ஆலந்தூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை தொடர மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.

இதுமட்டும் அல்லாது, வழக்கைப் பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசாரே இந்த வழக்கை முடித்து வைக்குமாறு அறிக்கை தாக்கல் செய்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details