சென்னை:முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகார் மற்றும் அனுமதியின்றி போராட்டம் நடத்தி கரோனா விதிகளை மீறியதாகவும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதையடுத்து, விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி. சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று பிறப்பித்த தீர்ப்பில், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்துவது பொதுவானது. அதற்காக வழக்குகள் பதிவு செய்ய முடியாது. சி.வி சண்முகத்தின் போராட்டத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதாக அரசு கூறுவதை ஏற்க முடியாது.