தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக ஐடி பிரிவு இணைச் செயலாளரை கைது செய்ய இடைக்கால தடை.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - ADMK IT WING JOINT SECRETARY CASE

சமூக வலைதளத்தில் பொய்யான தகவலை பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அதிமுக ஐ.டி.பிரிவு இணைச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமாரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras High Court
சென்னை உயர்நீதிமன்ற - கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. அப்போது, சென்னை மெரினாவில் மழை நீர் காரணமாக மின் கசிவு ஏற்பட்டதாக அதிமுக ஐ.டி.பிரிவு இணை செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவரது எக்ஸ் பக்கத்தில் தகவல் பதிவிட்டிருந்தார்.

இதனை அடுத்து, பொய்யான தகவல்களை பரப்பியதாக நிர்மல் குமார் மீது மூன்று பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சி.டி.ஆர்.நிர்மல் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, "சி.டி.ஆர்.நிர்மல் குமார் தொடர்ந்து உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சமூக வலைதளத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளதாக" தெரிவித்தார்.

இதையும் படிங்க:கள்ளச்சாராய விற்பனையை தடுக்காமல் அரசு தோல்வி அடைந்து விட்டது - சென்னை ஐகோர்ட் சரமாரி கருத்து!

மேலும், "உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பதிவு செய்யமாட்டேன் என ஏற்கனவே நீதிமன்றத்தில் உறுதி அளித்தும், தொடர்ந்து தவறான தகவல்களை பதிவிட்டு வருகிறார்" என்றும் தெரிவித்தார்.

இதனை அடுத்து நீதிபதி, எந்த ஒரு பதிவையும், உறுதிப்படுத்தாமல் எக்ஸ் தளத்தில் பதிவிடமாட்டேன் என்றும், பொய்யான தகவல்களை பதிவிடமாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 20ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும், அதுவரையில் சி.டி.ஆர்.நிர்மல் குமாரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details